×

வெள்ளித்திரையில் விரைவில் காண்க!… பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 8 மாதங்களே உள்ளதால் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக களத்தில் பணியை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளில் விலையானது உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவு ஏற்படும் என கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் ஒன்றிய அரசு அதிரடியாக சமையல் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் சிலிண்டர் வாங்கும் மக்களுக்கு ரூ.400 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த விலை குறைப்பை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் அச்சத்தால் விலை குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவருர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி. சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி. ரூ.1100-க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்து கொள்கிறது பாரீர்!. வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு! என பாஜக அரசை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

The post வெள்ளித்திரையில் விரைவில் காண்க!… பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress ,P. Chidambaram ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்